தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பாலியல் கொடுமை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் சின்மயி!. அப்படி பார்த்தால் நா எவ்வளவோ பண்ணிருக்கேன்!. ஓப்பனாக பேசிய லிவிங்ஸ்டன்!.
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார்.
இந்த நிலையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது, இந்த நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் சின்மயிக்கு எதிராக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த பாலியல் குற்றசாட்டு தற்போது தேவையில்லாத விஷயம் . இந்த சம்பவம் எப்பொழுது நடந்ததோ அப்போதே இதுகுறித்து புகார் அளித்திருக்க வேண்டும்.
இங்கு யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள், யார் உத்தமர் என்று ஒருவரை காட்டுங்கள். அப்படி பார்த்தால் என்னை உட்பட அனைவரையும் சிறையில் தான் அடைக்க வேண்டும்.
ஆசை என்பது இயற்கையான ஒன்று அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. பெண்கள் மட்டும் ஒழுக்கமா? எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்காக மற்றவர்களை கட்டாயப்படுத்துவது தான் தவறு.
அப்படி அவர் கட்டாயப்படுத்தியிருந்தால் கூறுங்கள், இப்படி வயதான காலத்தில் அவரை தொந்தரவு செய்வது சரியில்லை. நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ உள்ளது,