மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபார சாதனை.! பதக்கங்களை அள்ளி குவிக்கும் மகன்.! பெருமையின் உச்சத்தில் நடிகர் மாதவன்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளம்பெண்களின் கனவுகண்ணனாக, சாக்லேட் பாயாக வலம்வந்தவர் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இவர் இயக்கி நடித்த ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவ்வாறு நடிகர் மாதவன் ஒருபுறம் சினிமாவில் கலக்கிகொண்டிருக்கும் நிலையில் அவரது மகன் வேதாந்த் விளையாட்டு துறையில் சாதனை படைத்து வருகிறார்.
அதாவது அவர் நீச்சல் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் பல பதக்கங்களை குவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 5வது கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டியில் மகாராஷ்டிரா அணி சார்பில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி என பல பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் மாதவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், கடவுளின் ஆசிர்வாதத்தால் வேதாந்த் 100 மீட்டர் 200 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர், 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கலப்பு பிரிவுகளை சேர்த்து மொத்தம் 5 தங்கப்பதக்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை அவர் குவித்துள்ளார். இந்நிலையில் வேதாந்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.