மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பார்க்கில் தன் காதலியுடன் காதல் செய்யும் நாயகன்!" ஜெய் பீம் பட நடிகர் மணிகண்டனின் வீடியோ வைரல்!
பிரபல காமெடி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து பிரபலமானவர் மணிகண்டன். இதையடுத்து இவர் ஒரு எப் எம் மில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார். இதையடுத்து பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
2013ம் ஆண்டு "பீட்சா 2" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு "இந்தியா பாகிஸ்தான்" என்ற படத்திலும், தொடர்ந்து காதலும் கடந்து போகும், 8 தோட்டங்கள், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
"ஜெய்பீம்" படத்தில் ராஜாக்கண்ணுவாக இவரது நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. கதாநாயகனாக இவர் நடித்த "குட் நைட்" படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கத்தில் "லவ்வர்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ள நிலையில், மணிகண்டன் தனது காதலி திவ்யாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது படத்தின் ப்ரோமோஷன் உத்தி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தில் கௌரி பிரியா என்பவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.