மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. மன்சூர் அலிகான் பிக்பாஸ் செல்கிறாரா?.. அவரே வெளியிட்ட தகவல்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்று வெற்றிபெற்றவர் ராஜு. இதனைதொடர்ந்து இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கினார்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புதிய நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்ட்டி. இதில் ராஜூ கலகலப்பாக பேசி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ராஜுவுடன் சேர்ந்து பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் வாரம் ஒரு தனிநபரோ ஒரு குழுவோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். நடுவில் ராமரின் கலாய்யும், மதுரை முத்து காமெடிகளும் சேர்ந்து மிகவும் அமர்க்களமாக இருக்கும். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அனைவரையும் திணற வைக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகிய நிலையில், பிரியங்கா பிக்பாஸ்க்கு அழைத்தால் போவீர்களா? என்ற கேள்வியை கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், "சத்தியமா நான் அந்த ஷோவை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. அது எத்தனை மணிக்கு வருதுன்னு கூட தெரியாது" என்று கூறியிருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் மன்சூர் அலிகான் போனா மட்டும் போதும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேறு எதுவும் தேவையில்லை என்று எதிர்பார்த்து கூறியுள்ளனர்.