மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!
பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
57 வயது நிரம்பிய நடிகர் மயில்சாமி ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரை பல கதாப்பாத்திரங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். காமெடி கிங் விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இவர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அரசியல் கருத்துகள் பலவற்றை பேசியிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர் நடிகர் மயில்சாமி. தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். கருணாநிதியின் பாராட்டை பெற்றவர் நடிகர் மயில்சாமி. திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மயில்சாமி மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலக கலைஞர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.