#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் முரளி இரட்டை வேடத்தில் நடித்த ஒரே தமிழ் திரைப்படம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனது மென்மையான நடிப்பால் ரசிகா்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவா் நடிகர் முரளி. இவா் கா்நாடகாவை சோ்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமாவிலேயே கவனம் செலுத்தி பல வெற்றிபடங்களை நமக்காக கொடுத்தவா்.
இவா் நடித்த பெரும்பாலான படங்கள் இவருக்கு காதல் படங்களாகவே அமைந்தது. ஆகையால் இவருடைய காதபாத்திரம் பெரும்பாலும் சோகமாகவே அமைந்தது. இவா் மொத்தம் 99-படங்களில் நடித்துள்ளாா்.
குறிப்பாக மணிரத்னம் அவா்களின் முதல் தமிழ்பட ஹீரோ நடிகர் முரளிதான். படம் பகல்நிலவு. மேலும் கீதாஞ்சலி, அதா்மம், என் ஆசை மச்சான், இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க, புது வசந்தம், என் ஆச ராசாவே, இரணியன், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு ஆகியன குறிப்பிட தகுந்தவையாகும்.
இந்நிலையில் இவா் இரட்டை வேடத்தில் நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா?
அமீா்ஜான் என்பவரது இயக்கத்தில் முரளி நடித்து 1984-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புதியவன். இப்படத்தில் முரளியின் ஜோடியாக அனிதா நடிக்க இவா்களுடன் ரவீந்தா், டெல்லிகணேஷ், சுலோக்சனா உட்பட பலா் நடித்திருந்தனா்.
மேலும் இப்படத்தில் கங்கை அமரன் வைரமுத்து ஆகியோா் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தனா். கவிதாலயா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.