மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"செத்து செத்து விளையாடுவோமா டயலாக் புகழ் முத்துக்காளை" பெரிய படிப்பாளியாக மாறியதற்கு வடிவேலு தான் காரணமா.?
முரளி நடித்த "இரணியன்" படத்தில் அறிமுகமானவர் முத்துக்காளை. இதையடுத்து பிரபு நடித்த "பொன்மனம்" படத்தில் ஒரு சிறிய காமெடி வேடத்தில் நடித்தார். கிட்டத்தட்ட 240 படங்களுக்கு மேல் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் முத்துக்காளை.
கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ள இவர், ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக வேண்டும் என்ற கனவில் தான் சினிமாவிற்கு வந்துள்ளார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும், வடிவேலுவின் ஏராளமான படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
"என் புருஷன் குழந்தை மாதிரி" படத்தில் இவர் பேசிய "செத்து செத்து விளையாடுவோமா?" என்ற டயலாக் இவரை மிகவும் பிரபலமாக்கியது. சில மாதங்களுக்கு முன் இவர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது இவர் தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும் வரலாறில் இளங்கலையும், தமிழில் முதுகலையும் முடித்துள்ள முத்துக்காளை, தற்போது பி. லிட் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்காகப் பலரும் முத்துக்காளையைப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு வடிவேலு தான் காரணம் என்றும் இதனால் தான் முத்து காளை இந்த அளவிற்கு சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் படித்துள்ளார் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.