மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் நகுலின் அழகான மனைவியின் புகைப்படம் பாத்துருக்கீங்களா? இதோ!
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்த இவர் தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அதனை அடுத்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்துவருகிறார் நடிகர் நகுல். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார்.
நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார் நகுல். இவரது குடும்ப வாழக்கையை பார்த்தோமேயானால், இவரது நீண்ட கால தோழியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இதுவரை பெரிதாக வெளிவராத நகுலின் மனைவி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.