Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
பிரபல நடிகையுடன் தங்கியிருந்த நடிகர்! தேடிச்சென்று செருப்பால் அடிக்க பாய்ந்த 3வது மனைவி! பரபரப்பு வீடியோ!!
தமிழ் சினிமாவில் கவுரவம், அயோக்யா, கா.பெ.ரணசிங்கம், சமீபத்தில் வெளிவந்த வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் விரைவில் நடிகை பவித்ரா லோகேஷ் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. நடிகரான நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணமானவர். இருமனைவிகளை விவாகரத்து செய்தநிலையில் தற்போது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் நரேஷ் பாபுவும், நடிகை பவித்ராவும் மைசூரில் அபார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக தங்கியிருப்பதாக அறிந்த 3வது மனைவி ரம்யா அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வீட்டிலிருந்து பவித்ரா மற்றும் நரேஷ் வெளியே வந்தபோது அவர்களை செருப்பால் அடிக்க முற்பட்டுள்ளார். ஆனால் அங்கு வந்த போலிசார் ரம்யாவை சமாதானப்படுத்தி தடுத்துள்ளனர். ஆனால் நடிகர் நரேஷ் விசில் அடித்தபடியே சென்றுள்ளார். இந்த பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— 🫴𝐏𝐬𝐲𝐂𝐡𝐨𝐰🕊️ (@Wishnuvv) July 3, 2022