திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் அஜித்தின் அறிவுரை குறித்து நிவின் பாலி; வைரலாகும் வீடியோ.!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நிவின் பாலியின், பிரேமம் படம் மொழிகளை கடந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மொழிமாற்றம் இல்லாத படமாக தமிழ்நாட்டில் இன்று வரை பிரேமம் பலரின் மனதில் குடியிருக்கும் காவியமாக இருந்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நிவின் பாலி ரிச்சி என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பிரேமம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்று படக்குழு பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் நிவின் பாலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர் அஜித் சார் வீட்டிற்கு பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின் சென்று இருந்தோம். அவர் படத்தை பாராட்டிவிட்டு என்னிடம் அடுத்த படம், எதிர்கால நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது மிகுந்த கவனத்துடன் திரையுலகை அணுகுமாரும் அறிவுறுத்தினார்.
அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் உண்மையானது. எந்த நடிகராக இருந்தாலும் திரையுலகில் சிறிய சிறிய வெற்றிக்கு பின் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை அடைந்து பின் வீழ்ச்சி இருக்கும். அது அஜித் சாரின் வாழ்க்கையிலும் இருந்திருக்கும். அவர் கூறிய வார்த்தைகள் பல வலிகளை தாண்டி வந்தது. அதனால் ஏற்பட்ட சாதனை அவரை உச்சத்தில் வைத்துள்ளது. அந்த வார்த்தைகள் எதிர்காலத்தில் நமக்கும் புரியும்" என கூறினார்.
Nivin Pauly about Thala Ajith advices#NivinPauly #Ajithkumar pic.twitter.com/3BN9bTWG4t
— Nivin Fans Trends (@NivinFansTrends) May 3, 2024