திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 மொழிகளில் வெளியாகும் படத்தின் படப்பிடிப்பில் இணைத்துக்கொண்ட பிரபாஸ்; உறுதி செய்த படக்குழு.!
ஏவிஏ என்டேர்டைன்மெண்ட், 24 பிரேம்ஸ் பேக்டரி, மோகன் பாபுவின் தயாரிப்பில், ரூ.100 கோடி செலவில் உருவாகி வரும் தெலுங்கு திரைப்படம் கண்ணப்பா (Kannappa). இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், ப்ரீத்தி முகுந்தன், ஆர்.சரத்குமார், பிரம்மானந்தம், மது தேவராஜ், ஐஸ்வர்யா முகேஷ், ரிஷி ராகுல், மாதவ் கௌஷல் மண்டா, ரகு பாபு, அர்பித் ரங்கா, சப்தகிரி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
5 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் திரைப்படம்:
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவில், ஆண்டனி எடிட்டிங்கில், ஸ்டீபன் தேவஸ்ஸி, மணி சர்மா இசையில் உருவாகி வரும் திரைப்படம் தெலுங்கு மொழி கற்பனை நாடக படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து உட்பட வெளிநாடுகளிலும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகும் இப்படம் தெலுங்கு மொழி மட்டுமல்லாது தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியாகிறது.
🔥 Get ready for a cinematic explosion!🔥
— 24 Frames Factory (@24FramesFactory) May 9, 2024
We're ecstatic to reveal that our beloved darling #Prabhas has joined the sets of #𝐊𝐚𝐧𝐧𝐚𝐩𝐩𝐚🏹! Please stay tuned for more exciting updates.@iVishnuManchu @24FramesFactory @avaentofficial @KannappaMovie#KannappaMovie… pic.twitter.com/xPE2Wg9j8b
படக்குழுவுடன் இணைந்த பிரபாஸ்:
இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது நடிகர் பிரபாஸ் படக்குழுவுடன் இணைந்து இருக்கிறார். இந்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடைபெற்று முடிந்ததும் படத்தை விரைவில் திரையில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது. சிவ பக்தர்களை பற்றிய கதை என்பதால் அதிகம் விரும்பப்படும் எனவும் நம்பப்படுகிறது.