பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்.. நடிகர் பிரபுவின் மகனை தெரியும்! அவரோட மகளை பார்த்துருக்கீங்களா! செம்ம அழகா இருக்காரே!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரபு. இவர் தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
நடிகர் பிரபு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது பல பிரபலங்களின் படங்களில் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவின் மனைவி புனிதா.
இவர்களது மகன் விக்ரம் பிரபு. கும்கி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார். இவர் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபு மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.