திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"90களில் சாக்லேட் பாய் தான் இந்த சிறுவன்!" யார் என்று தெரிகிறதா?!
1990களின் பிற்பகுதியில் பிரபலமான முன்னணி நடிகராக, ரசிகர்களின் சாக்லேட் பாயாக இருந்தவர் பிரஷாந்த். இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான தியாகராஜனின் மகனாவார். இவர் 1990ம் ஆண்டு "வைகாசி பொறந்தாச்சு" படத்தில் அறிமுகமானார்.
இதையடுத்து பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்திலும், ஆர். கே. செல்வமணியின் செம்பருத்தி படத்திலும் நடித்தார். இதையடுத்து திருடா திருடா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
1995ம் ஆண்டு "ஆணழகன்" படத்தில் இவர் பெண் வேடமிட்டு நடித்தது அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார் பிரஷாந்த். மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
தொடர்ந்து சில வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாதிருந்த பிரஷாந்த், 2011ம் ஆண்டு "பொன்னர் சங்கர்" படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது அந்தகன் மற்றும் தளபதி 68 ஆகிய இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரசாந்தின் சிறுவயது புகைபபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.