பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்த சிறுவன்.. 90ஸ் பெண்களின் கனவு நாயகனா.?! யாரென்று தெரிகிறதா.?!
90ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் தான் பிரசாந்த். தமிழில் அவர் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகன் என்பது இவருக்கு கூடுதல் பிளஸ். நடிகர் பிரசாந்த் சிம்ரன், கிரண், ஜோதிகா, சினேகா போன்ற பல முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க நீ, நான் என்று முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவருடன் நடித்த பெருமைக்கு உள்ளானவர் பிரசாந்த் தான்.
இவரது நடிப்பில் வெளியான கண்மணி, கிழக்கே வரும் பாட்டு, ஆணழகன், செம்பருத்தி, வின்னர், ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்த வெற்றியை கொடுத்தன. ஒரு கட்டத்திற்கு பின் பிரசாந்தின் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. வின்னர் படம் தான் அவரது நடிப்பில் வெளியாகி நன்றாக ஓடிய கடைசி திரைப்படமாக இருந்தது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலினால் இவரது சினிமா வாழ்வும் பாதிக்கப்பட்டது.
அந்தகன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க பிரசாந்த் நினைத்தாலும் அதன் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது அவர் நடிகர் விஜயின் கோட் படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக நிறைய திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரசாந்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது