மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#HBD உதயநிதி ஸ்டாலின்..! நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, எம்.எல்.ஏவுக்கு இன்று பிறந்தநாள்..!
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவரது மனைவி கிருத்திகா உதயநிதி. உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா தம்பதிக்கு இன்பன், தன்மையா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரனான உதயநிதி, கடந்த காலங்களில் திரைப்பட தயாரிப்பாளராக பணியாற்றி வந்தார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு படங்களையும் தயாரித்து தமிழ் திரையுலகுக்கு வழங்கியுள்ளார்.
பின்னாளில், திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் கொண்ட உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வாயிலாக தமிழக மக்களிடையே கதாநாயகராக அறிமுகமாகி, எம்.எல்.ஏ வாக உயர்ந்து இருக்கிறார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் - திருவெல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், தேர்தலில் அமோக வெற்றி அடைந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பிலும், திரைத்துறை நடிகர், தயாரிப்பாளர் என்ற பொறுப்பிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பிலும் திறம்பட செயலாற்றி வரும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு நவ.27 ஆம் தேதியான இன்று பிறந்தநாள்.