மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: நடிகர் புகழ் - பென்சி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை - மகாராணி பிறந்துவிட்டதாக மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்.!
சின்னத்திரையில் இருந்து தமிழ் திரையுலகில் காமெடி நட்சத்திரமாக கலக்கி வருபவர் புகழ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.
கொரோனா காலகட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழக மக்களின் பேராதரவை பெற்ற நடிகர் புகழ், கடந்த ஆண்டு தனது காதலி பென்சியை திருமணம் செய்தார்.
இருவரின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக நகர்ந்தது. சமீபத்தில் பென்சிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில், தற்போது புகழ் - பென்சி தம்பதி பெற்றோராகியுள்ளனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து புகழ் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள்... மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்👧🏻...#என்மகளே ...தாயும் சேயும் நலம் ❤️" என தெரிவித்துள்ளார்.