மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இது வேற லெவல்! பிரபல பாலிவுட் தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன்,பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் என பலரும் நடிக்கின்றனர். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சஜித் நடியாவாலாவை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சஜித் நடியாவாலா, சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினி பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.