ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட்ராசக்க.. ரசிகர்களே தயாரா இருங்க.. விரைவில் ரசிகர்களை சந்திக்க களமிறங்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..! எப்போ தெரியுமா?..!!
சென்னையில் உள்ள வியாசர்பாடியில் அமைந்திருக்கும் தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, "அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார். இந்த அமைப்பு நன்றாக வளரவேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
இப்போது இந்த அறக்கட்டளை ஏழைமக்களுக்கு உதவி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஆசீர்வாதத்துடன் இவை நடைபெற்றுள்ளது" என்று கூறினார். மேலும் "நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ரசிகர்களை விரைவில் சந்திப்பார். ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடக்க வாய்ப்புள்ளது.
ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு அந்த இறைவனிடம் மட்டுமே உள்ளது". ரஜினிகாந்த் அவர்கள் அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் மட்டுமே ஆளுநரை சந்தித்ததாக அவர் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.