கூலி பட இசை காப்புரிமை விவகாரம்; ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?.. நச் பதில்.!



Actor Rajinikanth on Coolie Music rights Issue by Ilayaraja 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. அனிரூத் இசையமைக்கிறார். 

படத்தின் டைட்டில் கார்ட் போஸ்டர் வெளியானபோது, அதில் பயன்படுத்தப்பட்ட இசை தன்னுடையது என இளையராஜா உரிமை கொண்டாடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் வழங்கினார்.

மேலும், இசை காப்புரிமை விவகாரத்தில் சட்டரீதியான அணுகல் வேண்டும் எனவும் அவர் தரப்பு கோரிக்கை வைத்தது. 

ஆனால், ஏற்கனவே விலை கொடுத்து வாங்கப்பட்ட படம் அல்லது அதனை தயாரிப்பவருக்கே அப்படத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் சொந்தம் என சன் பிக்சர்ஸ் தரப்பு கூறுகிறது. இவர்களின் சட்டப்போராட்டம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், டிஜெ ஞானவேலின் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அதனை நிறைவுசெய்து சென்னை திரும்பிய ரஜினியிடம், இசை காப்புரிமை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், இந்த விஷயத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இசை காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளர் - தயாரிப்பாளர் இடையேயானது என கூறி சென்றார்.