மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. என்னவொரு டெடிகேஷன்! நடிகை மீனா இப்படிதான் உடை மாற்றினார்.! உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்து பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் முதல்முதலாக ஹீரோயினாக அறிமுகமானது ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் தான்.
இப்படத்தில் நடிக்கும் போது அவரது வயது 16தான் இருக்கும். அந்தப் படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போலவும் அருமையாக நடித்திருப்பார். இந்த நிலையில் அண்மையில் மீனா சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு அவரைப் பற்றி பெருமையாக பேசினர்.
அப்பொழுது பேசிய நடிகர் ராஜ்கிரண் கூறுகையில், மீனா படத்தில் மட்டும் என்னை பார்த்து பயந்ததா எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா அவர் நிஜத்திலும் என்னை பார்த்து ரொம்ப பயந்தார். படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே அவர் என்னிடம் பேசவில்லை. ஆனால் நடிப்புன்னு வந்துவிட்டால் அவர் காலம், நேரம் எல்லாம் பார்க்க மாட்டார். எந்த சூழ்நிலையா இருந்தாலும் நடிக்க தயாராகிடுவாங்க.
இப்போ உள்ளது போல் அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. இந்நிலையில் ஒரு பாடல் காட்சிக்காக மீனா உடை மாற்ற வேண்டியிருந்தது. உடனே அவர் ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் உடையை மாற்றிக் கொண்டார். அந்த அளவிற்கு அவர் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இப்போது உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது என மீனா குறித்து மிகவும் பெருமையாக பேசி உள்ளார்.