தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
400 ஆதிவாசி குடும்பங்களுக்காக உதவிக்கரம் நீட்டி நடிகர் ராணா செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!
நாடு முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் பலருக்கும் தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா டகுபதி தற்போது விராட பருவம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
விராட பருவம் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் என்னும் மாவட்டத்தில்தான் அதிகம் நடைபெற்றுள்ளது. அங்கு படப்பிடிப்பின்போது அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களுடன் ராணா நெருங்கிப் பழகியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் ராணா உதவிக்கரம் நீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.