மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சீரியல் நடிகை சங்கீதா திருமணம்: 46 வயதில் தொடங்கிய வாழ்க்கை., குவியும் வாழ்த்துக்கள்..!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கணித்த குரலில், நகைச்சுவையான உணர்வுகளுடன் இவர் பேசக்கூடிய இயல்பு கொண்டவர்.
முதன் முதலாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ரெடின் நடித்திருந்தார். அந்தப்படத்தில் இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஏ1, நெற்றிக்கண், டாக்டர், பீஸ்ட், டிடி ரிட்டன்ஸ், ஜெயிலர், மார்க் ஆண்டனி, 80ஸ் பில்டப், வா வரலாம் வா, கான்ஜுரிங் கண்ணப்பன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
46 வயதாகும் நிலையிலும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது தொலைக்காட்சி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Happy Married Life #RedinKingsley & #Sangeetha 🥰🥳pic.twitter.com/8GqaPg9oAw
— Kolly Corner (@kollycorner) December 10, 2023