பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சாரே கொல மாஸ்..! தன்னை இழிவாக எண்ணியவர்களுக்கு இரும்பு மனிதனாக உருமாறி ஆச்சரியம் கொடுத்த ரோபோ ஷங்கர்.!
தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, தொலைக்காட்சிகளில் மக்களின் மனதை வென்று வெள்ளித்திரைக்கு வந்து சாதனையானவர்கள் ஏராளம்.
நடிகர் ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் நன்மதிப்பை பெற்று, அதனைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல்நலம் முன்னேறி, மீண்டும் முழு பலத்தோடு படங்களில் நடித்து வருகிறார்.
அதீத மதுப்பழக்கம் காரணமாக மஞ்சள் காமாலை உட்பட பல உடல்நலக்கோளாறுகளை எதிர்கொண்டு, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திற்கு சென்ற ரோபோ சங்கர், நக்கீரன் கோபால் உதவியுடன் காப்பாற்றப்பட்டார்.
சங்கரின் மனைவி மற்றும் குழந்தைகள் பல சிரமங்களுக்கு மத்தியில் நன்கு கவனித்து உடல்நலம் தேற்றினர். இந்நிலையில், தான் மீண்டும் நல்ல உடல்நிலைக்கு வந்துவிட்டதை ரோபோ வித்தியாசமான முறையில் தமிழக மக்களுக்கு காண்பித்து இருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட அவர், தனது உடற்வாகை மேம்படுத்தி வருவதை காட்சிப்படுத்தியுள்ளார். அவரின் வீழ்ச்சியை எதிர்பார்த்த பலரும் தற்போது ஒதுங்கிச்செல்லும் காலம் வந்துவிட்டது.
தொடர் வேலை என உணவே சாப்பிடாமல், உலகை சுற்றி நிகழ்ச்சிகளுக்கு பயணித்தபோது மதுபானம் அருந்தியதே இவ்வாறான சோகத்திற்கு காரணம் என ரோபோவே மனம் வருந்தி பேட்டி அளித்திருந்தார்.
அவர் வீழவேண்டும் என எண்ணிய பல நெஞ்சங்களுக்கு மத்தியில், தன்னை சுற்றி இருந்த சில நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியால் மீண்டும் பிழைத்த இரும்பு மனிதனாக தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார் இந்த நிஜ ரோபோ..