திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது; நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி.!
ரசிகர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என வருணிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்துக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது. கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானதை தொடர்ந்து, அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்குவதாக அறிவித்தது.
குடியரசுத் தலைவரின் கையில் இருந்து வழங்கப்பட்ட விருது:
இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து பலருக்கும் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விஜயகாந்துக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை விஜயகாந்தின் சார்பாக அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேரில் பெற்றுக்கொண்டார். உடன் அவரின் மகன் விஜய பிரபாகரனும் டெல்லி சென்றிருந்தார்.
சத்யராஜ் மகிழ்ச்சி:
இந்நிலையில், விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட விஷயம் குறித்து மனம் திறந்துள்ள நடிகர் சத்யராஜ், "எனது அன்புமிகுந்த நண்பர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. அவரின் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என கூறினார்.
இருந்தாலும் மறைந்தாலும் இவர்பெயரை ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பாடலுக்கு ஏற்பட பல நன்மையை செய்து வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் என்றும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்.