#HBDSathyaraj: தமிழ் உணர்வாளர், முற்போக்கு பற்றாளர், திரைப்பட நடிகர் சத்யராஜுக்கு இன்று பிறந்தநாள்.!



Actor Sathyaraj Birthhday Today

கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சுப்பையா சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராவார். இவரது மகன் சிபிராஜ் பல திரைப்படத்திலும்  நடித்து வருகிறார். தனது திரைப்பட வாழ்க்கையில் பெரியாரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் சத்யராஜ் சம்பளமில்லாமல் படத்தை எடுத்துக் கொடுத்தார். 

Sathyaraj

இதையடுத்து அன்றைய திராவிட கழக தலைவர் வீரமணி, பெரியாரின் மோதிரத்தை அன்பளிப்பாக அவருக்கு வழங்கியிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் மீது பற்று கொண்டு தமிழரோடு இருந்து வந்த சத்யராஜ், பேரறிவாளன், சாந்தன், முருகனின் மரணத்தை ரத்து செய்யக்கோரி எடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார்.  

Sathyaraj

இதில் சத்யராஜ் நடித்த வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, குங்குமப்பொட்டு கவுண்டர், இங்கிலீஷ்காரன், சுயேட்சை எம்.எல்.ஏ, வில்லாதி வில்லன், பூவிழி வாசலிலே, அமைதிப்படை நாகராஜசோழன்  உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், குணச்சித்திர வேடங்கள் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யராஜுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அவரின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.