மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர்களை குறித்து சத்யராஜின் பரபரப்பான கருத்து.! வைரல் வீடியோ..
இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருப்பவர் சுசீந்திரன். இவர் 2009ம் ஆண்டு "வெண்ணிலா கபடிக்குழு" திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார். தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக 2021ம் "ஈஸ்வரன்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் "வள்ளி மயில்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சுசீந்திரன், சத்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சத்யராஜ் பேசியதாவது, "பொதுவாக நாம் நடிக்கும் படங்களில் தனிப்பட்ட கொள்கைகளை திணிக்க முடியாது.
நடிக்க வந்தோம் என்று சொல்வதை செய்து விட்டுப் போவோம். ஆனால் சில படங்களில் மட்டுமே நம் இலட்சியத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்கள் அமையும். "வள்ளி மயில்" படம் அப்படிப்பட்டது தான். பெண்ணின் பெயரை படத்திற்கு வைத்ததில் மேலும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.