தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
#JustIN: பாலிவுட் பாஷா., நடிகர் ஷாருக்கானுக்கு 'ஹிந்துஸ்தானி' கொலை மிரட்டல்; ரசிகர்கள் அதிர்ச்சி.!
நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பாலிவுட்டின் பாஷா என வருணிக்கப்படும் இந்திய திரைப்பட நடிகர் ஷாருக் கான், மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு ரூ.50 இலட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, பாந்திரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர், உடனடியாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த பைசன் என்பது தெரியவந்தது. அவரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பைசனை கைது செய்தனர். பாந்த்ரா காவல்துறையினருக்கு நேரடியாக தொடர்புகொண்ட நபர், கொலை மிரட்டல் விடுத்தது அழைப்பை துண்டித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" - ரஜினி ரசிகர் கோரிக்கை.!
ரூ.50 இலட்சம் வேண்டுமாம்
கடந்த நவம்பர் 5 ம் தேதி பெறப்பட்ட அழைப்பின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பைசனை தற்போது கைது செய்துள்ளனர். ஹிந்துஸ்தானி என தன்னை அறிமுகம் செய்துகொண்ட பைசன், ஷாரூக்கானிடம் ரூ.50 இலட்சம் பணம் வாங்கி தரவேண்டும். இல்லையேல் அவர் உயிருடன் இருக்கமாட்டார். எனது பெயர் ஹிந்துஸ்தானி என குறிப்பிட்டு இருக்கிறார்.
சல்மானை தொடர்ந்து ஷாருக்
இதனையடுத்து, மர்ம நபர் அழைப்பு விடுத்த என்னை ட்ராக் செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பீஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வரும் நிலையில், நடிகர் ஷாரூக்கானிடம் ரூ.50 இலட்சம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சங்கர் - நடிகர் கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம், ஹிந்தியில் ஹிந்துஸ்தானி 2 பெயரில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் "கருப்பி" மரணம்; வாகனம் மோதி சோகம்.!