#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை கடந்த டங்கி வசூல்..! விபரம் இதோ.!
ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் டங்கி.
இப்படம் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெட் தயாரித்து, ஸ்டுடியோ 18 நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ரூ.120 கோடி செலவில் தயாரான திரைப்படம், இன்று உலகளவில் வெளியானது.
இந்நிலையில், இப்படம் திரைக்கு வரும் முன்பே ஆன்லைன் மற்றும் ஓடிடி உரிமை என ரூ.200 கோடியை கடந்து வசூல் செய்திருந்த நிலையில், நேற்று முதல் நாள் மட்டும் இந்திய அளவில் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, இன்று ரூ.43 கோடியை கடந்து டங்கி திரைப்படம் உலகளவில் வசூல் செய்து, மொத்தமாக ரூ.103.4 கோடி பணம் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று, திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.