மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அங்கேயுமா.. நடுரோட்டில் மனைவியுடன் சேர்ந்து நடிகர் சாந்தனு செய்த காரியத்தை பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமையோடு வலம்வரும் பாக்யராஜின் மகன் சாந்தனு. தமிழில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து, தனது திறமையால் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
நடிகர் சாந்தனு இறுதியாக ரஞ்சித் நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடனம் என மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இருவரும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர். அதில் அவர்கள் தாங்கள் போடும் செல்லச் சண்டைகள், சுற்றுலா செல்லும் வீடியோக்கள் போன்றவற்றை பகிர்வர்.
நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு நடுரோட்டில் அவர்கள் வாடி...வாடி நாட்டுக்கட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர்கள் 'நாங்க எங்க விட்டாலும் ஆடுவோம்' என கூறியுள்ளனர். அந்த ஜாலியான வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.