மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!



Actor Shivaji Ganesh old house image viral

தமிழ் சினிமாவில் 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் முதலில் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் என்ற பெருமை சிவாஜி கணேசனை சேரும்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு இன்று வரை யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். 

Shivaji Ganesh

தந்தையை போன்று இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருந்து வருகிறார் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு. இவ்வாறு சிவாஜி கணேசன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒருவர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவாஜி கணேசனின் பண்ணை வீட்டு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சூரக் கோட்டையை பூர்விகமாக கொண்டவர் சிவாஜி கணேசன். அங்கு இவருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை சுற்றி சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னந்தோப்புகள் அதிகம் காணப்படுகின்றன.