மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட பண்ணை வீடு கட்டிய சத்யராஜின் மகன் சிபிராஜ்.. வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். தற்போது இவர் கெஸ்ட் ரோல் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சிபிராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். மகள் திவ்யா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் பண்ணை வீடு ஒன்றை கட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்களை சிபிராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.