மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க தேர்வானது எப்படி? - மனம் திறந்த சித்தார்த்.!
ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத்தி சிங், நயன்தாரா, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக், மாரிமுத்து, எஸ்.ஜே சூர்யா, மனோபாலா, யோகிபாபு, சமுத்திரக்கனி, கார்த்திக், தம்பி ராமையா, பாபி சிம்ஹா, காளிதாஸ் ஜெயராம், சதிஷ், ஜியார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
விரைவில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படம் இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் பல சுவாரஷ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக சில தகவலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்துகொண்ட சித்தார்த், "வீட்டில் நான் இருந்தபோது ஷங்கர் சார் என்னை போனில் தொடர்பு கொண்டார்.
முதலில் சார் எதற்காக நமக்கு தொடர்புகொள்கிறார்? என சந்தேகத்துடன் போனை எடுத்தேன். இந்தியன் 2 குறித்து கூறினார். நான் நேரில் சென்று எதற்காக இந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க தேர்வு செய்தீர்கள் என கேட்டேன்.
அதற்கான பதில் படத்தில் இருக்கிறது. படம் வெளியான பின்பு நான் அதனை உங்களுக்கு கூறுகிறேன். படத்தில் அந்த பதிலை நீங்களே வெளியான பின்பு கண்டறிந்துவிடலாம்" என கூறினார்.