மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா?? இப்படி மிஸ் பண்ணிட்டாரே!!
தமிழ் சினிமாதுறையில் புரியாத வரிகளை பாடலாக்கி அதனை ரசிகர்கள் ரசித்து கொண்டாடும் விதமாக இசையமைப்பவர்தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பதில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்ததற்கு இவர் நடிப்பும் ஒரு காரணம்.
ஆனால் இப்படத்தில் நடிக்க இயக்குனர் சசி அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த நடிகர் சித்தார்த் தான் என கூறப்படுகிறது. பிச்சைக்காரன் படத்தின் கதையை இயக்குனர் சசி அவர்கள் முதலில் சித்தார்த்திடம் கூறியதாகவும், அதில் சித்தார்த்துக்கு ஆர்வம் இல்லாததால் அந்த கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்து விஜய் ஆண்டனிடம் கூறியுள்ளார்.
பின் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து படம் பெரும் ஹிட்டான நிலையில் நடிகர் சித்தார்த் அப்படத்தில் நடிக்க மறுத்ததை நினைத்து மிகவும் கவலைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.