மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்ஃபியா எடுக்கணும்.. நடிகர் சித்தார்த் செய்த காரியத்தை பார்த்தீங்களா! ஷாக்கான ரசிகர்கள்! வைரல் வீடியோ!!
திரைத்துறையில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்கவே பெரும் கூட்டம் கூடும். மேலும் அவர்களுடன் ஒரு செல்பியாவது எடுக்க வேண்டுமென பெருமளவில் முயற்சிப்பர். சிலர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வர். சிலர் நிராகரிப்பர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் சித்தார்த். அவர் அண்மையில் லிப்டில் ஏறி சென்றபோது ரசிகர் ஒருவர் முந்தியடித்துக் கொண்டு ஓடி வந்து லிப்டிற்க்குள் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். உடனே சித்தார்த் அந்த நபரின் செல்போனை பிடுங்கியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இதற்கு முன்பு நடிகர் சிவகுமார் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவரை விமர்சனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் அந்த இளைஞருக்கு புதிய செல்போனை வாங்கி அனுப்பியிருந்தார். மேலும் நடிகர் அஜித்தும் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தபோது செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போது சித்தார்த்தும் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனைப் பிடுங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#செல்ஃபியா.... போனை பிடிங்கிய #நடிகர்சித்தார்த் @kalilulla_it @abm_tn @The_Abinesh @me_dineshudhay @Journalist_guna @rajakumaari @Munaf_SMM @bhuvanasekar @ZeeTamilNews pic.twitter.com/1zCKuy5FpM
— Nowshath A (@Nousa_journo) September 5, 2022