மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொன்ன வாக்கை காப்பாற்றாத சிம்பு.. அடுத்த படத்திற்கும் ஆப்பா?..! கடுப்பான தயாரிப்பாளர்..!!
கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவின் நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் சர்ச்சையை சந்தித்து பின் நாட்களில் வெளியாவது வழக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது கமல் தயாரிப்பில் சிம்பு படத்தில் நடிக்க உள்ளது உறுதியாக செய்யப்பட்டது. தேசிங் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படம் வரலாற்று தொடர்பு மிக்கது என்பதால் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை தயாரித்து வழங்கிய ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதமனனுக்கு புல்லட் பரிசாக கொடுத்ததும், இப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை திரைபடமாக்க போவதாகவும், அதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், வேல்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கை மீறி சிம்பு செயல்பட்டு வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் திடீர் முறையீடு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது சிம்புவுக்கு இக்கட்டான சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. மேலும் இதன் காரணமாக பிற்காலத்தில் இது தொடர்பான பிரச்சனை எழுமா? இது சிம்புவின் அடுத்த திரைப்படத்திற்கு ஆபத்தாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.