பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இரட்டை வேடத்தில் மன்மதனாய் மீண்டும் களமிறங்கும் நடிகர் சிம்பு; அசத்தல் அப்டேட் இதோ.!
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த நிலையில், சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், கமல் தயாரிக்கும் திரைப்படத்திற்கான நடிகை தேர்வு நடைபெற்று வருவதாகவும், சிம்பு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் அவர், இப்படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க இருக்கிறாராம். இதற்கு முன்னதாக மன்மதன் படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்து படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.