திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லோகேஷ் கனகராஜின் ரஜினி 171வது படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர்.! அவரோட கனவு நிறைவேறுமா??
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ரஜினிகாந்தின் 171வது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய, முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் 171வது படத்தை இயக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். இயக்குனர் லோகேஷ் இப்படத்திற்காக கதை உருவாக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.