#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்ராசக்க.. விரைவில் நடிகர் அஜித்துடன் பைக் டூர்.. உற்சாகத்துடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அடுத்ததாக இவரது நடிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான்.
சமீபத்தில் அயலான் படத்தின் இசை வெளியீடு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "சமீபத்தில் அஜித் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம் பைக் டூர் செல்ல விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டார்.
அதற்கு நானும் என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க. கண்டிப்பா ஆர்வம் இருக்கு என்று சொன்னேன். இதைக்கேட்டு என்னை பாராட்டினார். விரைவில் அவருடன் ஒரு பைக் டூர் செல்லலாம்" என்று கூறினார்.