திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திக்கேயனா இது.?! ஆளே மாறிட்டாரே.! புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணி புரிந்தார். இதன் பின்பு அவரது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் 'மெரினா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக காலடியெடுத்து வைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
இப்படத்திற்கு பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, காக்கி சட்டை, மான் கராத்தே, வேலைக்காரன், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஹீரோ ரெமோ, டாக்டர், டான், மாவீரன், அயலான் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
மேலும் சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அந்த அளவிற்கு தனக்கென தனி இடத்தை தமிழ் திரை துறையில் நிலைநாட்டிக் கொண்டார் சிவகார்த்திகேயன். நடிகராக தயாரிப்பாளராகவும், தமிழ் சினிமாவில் களமிறங்கி வெற்றி நடை போட்டு வருகிறார்.
இது போன்ற நிலையில் இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் பாலோயர்களை கொண்ட சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகராக இருந்து வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது தெறிக்கவிடும் லுக்கில் ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படம் பதிவிட்டு வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.