திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடுத்தடுத்த தோல்வி.. மார்க்கெட்டை தக்கவைக்க சம்பளத்தை குறைத்த பிரபல நடிகர்..! என்னப்பா இப்படி ஆகிருச்சு..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகை மரியா, சத்யராஜ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வெளியானது.
படம் வெளியாவதற்கு முன் ரசிகர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், வெளியான பின் பல நெகட்டிவ் விமர்சனங்களை இப்படம் குவித்தது. மேலும் படத்தில் சுவாரசியமில்லை எனவும், காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.
இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனதில் அந்தளவு இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது சம்பளத்திலிருந்து அவர் ரூ.5 கோடி குறைத்திருக்கிறார் என்றும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படத்திலும் ரூ.5 கோடி குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.