திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Video : நடிகர் சூரிக்கா இந்த நிலமை.?! அடப்பாவமே.! வைரலாகும் வேதனை வீடியோ.!
ஏப்ரல் 19ஆம் தேதியான நேற்று 18-வது மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக துவங்கியது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடக்கவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வாக்கு சாவடியில் வாக்கு செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், பிரபல திரைப்பட நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட காரணத்தால் அவரால் வாக்கு செலுத்த முடியவில்லை.
இது தனக்கு பெரும் மன வருத்தத்தை அளிப்பதாக சமீபத்தில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், அவர், "எனது கடமையை நிறைவேற்ற வந்தேன். இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் என் கடமையை நான் சரியாக செய்தேன். இருப்பினும் இந்த முறை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று கூறுகின்றனர். என் மனைவியின் பெயர் எல்லாம் இருக்கிறது. என் பெயர் மட்டும் தான் இல்லை.
எல்லோரும் வாக்களியுங்கள்🙏 pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024
என்னால் ஓட்டு போட முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த தவறு எதனால் ஏற்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. என்னால்தான் ஓட்டு போட முடியவில்லை. ஓட்டு போட முடிந்த நீங்களாவது 100 சதவீத வாக்குகளை செலுத்துங்கள். இதை நான் மிகவும் வேதனையுடன் பதிவு செய்கிறேன். அடுத்த முறை உங்களுடன் சேர்ந்து நானும் வாக்களிப்பேன் என நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.