திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
மதுரை மற்றும் அதனை சுற்றிள்ள மாவட்ட மக்கள் திரளாக சிறப்பிக்கும், மதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கள்ளழகர் இன்று பச்சை நிற பட்டாடை உடுத்தி வைகை ஆற்றில் இறங்கி காட்சிதந்தார்.
விழாக்கோலம் பூண்ட தூங்கா நகரின் கொண்டாட்டங்களை கடந்த 10 நாட்களுக்கு மேலாக மக்கள் திரளாக கண்டுகளித்து வந்தனர். இன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் வெகுவிமரிசையாக பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே நடைபெற்றது.
அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன். "இவர்தான்டா அழகர்..நல்லா பாரு" என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும்… pic.twitter.com/yJ8bKmN5Gw
— Actor Soori (@sooriofficial) April 23, 2024
இந்நிலையில், அழகரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் நடிகர் சூரி தனது சமூக வளைத்தபக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், "அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து , முதன்முதலில் அழகரை பார்த்தேன்.
"இவர்தான்டா அழகர்..நல்லா பாரு" என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன் .. பேரானந்தம்.. நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.