திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. யங் ஹீரோயின்களையே ஓரம்கட்டிடுவார் போல.! நடிகர் ஸ்ரீ காந்தின் மனைவி எப்படியுள்ளார் பார்த்தீங்களா.! கியூட் க்ளிக்ஸ்!!
தமிழ் திரையுலகில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். அதனைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ் எனத் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் அவர் தொடர்ந்து பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அஹானா என்கிற 13 வயது மகளும், ஆஹில் என்கிற 15 வயது மகனும் உள்ளனர். திருமணமாகி 16 ஆண்டுகளானாலும் ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா இருவரும் இன்றும் இளமை குறையாமல் செம யங்காக உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு எடுத்த புகைப்படங்களை வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ரீகாந்த் பட்டு வேஷ்டி சட்டையும், வந்தனா பட்டுசேலையும் அணிந்து செம யங்காக, க்யூட்டாக உள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் இன்றும் இளமையாக இருக்கிறீர்களே! சீக்ரெட் என்ன? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.