மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரசியத்துடனும் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடரில் போலீசாக நடித்தவர் நடிகை சசிந்தர் புஷ்பலிங்கம்.
இவர் வம்சம் தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் கடவுள் முருகன், ரோஜா, சந்திரகுமாரி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் அண்மையில் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
மேலும் மனைவியுடன் விதவிதமாக எடுத்த கர்ப்பகால புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் அழகிய புகைப்படத்துடன், கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.
அதாவது அவர், அகத்தை ஆட்கொண்ட அன்பே, தாயினுள் தோன்றிய தவமே, தந்தையின் தோளில் சுகமே, பெற்றோரின் பொக்கிஷம் நீ! வாழ்வின் அர்த்தம் நீ! காதலின் "சகா"ப்தம் நீ!யாவும் நீ! யாதும் நீ! SAGA நீ!" என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.