மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம்.! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா!! என்ன காரணம்??
தெலுங்கு திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் உலகளவில் பெருமளவில் பிரபலமானார். இதற்கு முன்பு ராணா தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ராணா தற்போது 'ராணா நாயுடு' என்ற வெப்தொடரில் நடித்துள்ளார். மேலும் இதில் வெங்கடேஷ், சுர்வீன் சாவ்லா, சுசித்ரா பிள்ளை, கௌரவ் சோப்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஓ.டி.டி தளத்தில் வெளியான இந்த தொடரில் அளவுக்கு மீறிய ஆபாசம் மற்றும் கெட்ட வார்த்தைகள் அதிகம் மிகுந்த காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்களிடம் ராணா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த தொடரை யாரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டாம். தனியாக பாருங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.