மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே! தனுஷ் தவறவிட்ட சூப்பர்ஹிட் திரைப்படம்.! விக்ரம் நடிகர் வெளியிட்ட சீக்ரெட்!!
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சினிமாத்துறையே கலக்கி வருகிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்குகிறார். சில காலங்களாக இவரது படங்கள் தோல்வியைத் தழுவி வந்த நிலையில், அவர் மீண்டும் வெற்றியை நிலைநாட்ட தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் தனுஷ் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம் குறித்து நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார். அதாவது மலையாளத்தில் நடிகர் பகத் பாஸில் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கும்பலங்கி நைட்ஸ். இந்த படத்தில் முதலில் நடிகர் தனுஷ்தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து நடிகர் பகத் பாசிலை பட குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தகவலை நடிகர் பகத் பாஸிலே தற்போது வெளியிட்டுள்ளார்.