மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வைகை புயல் வடிவேலுவின் வீட்டில் சோகம்; கண்ணீரில் குடும்பத்தினர்..!
தமிழ் திரையுலகில் வைகை புயலாக, இன்று வரை காமெடி கதாபாத்திரங்களில் மிகமுக்கியமான நடிகராக வலம்வருபவர் வடிவேலு. இவர் இன்றைய நெட்டிசன்கள் மீம் டெம்ப்லேட்களுக்கான முக்கிய தலைவரும் ஆவார்
தமிழக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நபர்களில், வடிவேலுவின் பங்கு தவிர்க்க முடியாதது. வடிவேலுக்கு 55 வயதுடைய ஜெகதீஸ்வரன் என்ற சகோதரர் இருக்கிறார்.
இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில், காதல் அழிவதில்லை படத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஜெகதீஸ்வரன், விரகனூர் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைகளும் பலனின்றி இயற்கை எய்தினார். இவரின் மறைவு அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.