வைகை புயல் வடிவேலுவின் தம்பியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!



Actor vadivelu brother photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் விஜய், அஜித், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதை பத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலு இதுவரை தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மாமன்னன் என்ற திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vadivelu

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்துள்ளார். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் வடிவேல் மாறியே உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.