குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இவர்தான் வடிவேலுவின் மகனா.?! வைரல் புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்.!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் இருந்தாலும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், அவர் நடித்த போது இருந்த காட்சிகள் யாவும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பழங்காலத்தில் நாகேஷுக்கு எந்த அளவிற்கு புகழ் இருந்ததோ அதே அளவிற்கு வடிவேலுவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் தான்.
தனது உடல் மொழியாலும், முகபாவனையாலும் நம்மை சிரிக்க வைப்பதில் வடிவேலு வல்லவர். தற்போது வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் விளங்குகிறார். அவர் காமெடியன் என்பதை தாண்டி குணச்சித்திர நடிகராகவும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த போதும் கூட மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலுவை விட்டு வைக்காமல் அவரது புகழை பட்டி தொட்டி எங்கும் பரப்பி வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் அவர் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
நடிகர் வடிவேலுவிற்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். அவரது கடைசி மகளைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் வடிவேலுவின் மகனான சுப்பிரமணியனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இவர்தான் வடிவேலுவின் மகனா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலு மற்றும் அவரது மகன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.