வையாபுரியா இது..? கண்ணாடி, தொப்பி.. ஹாலிவுட் ஹீரோபோல் மாறிய வையாபுரி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்



Actor vaiyapuri latest modern look photos

நடிகர் வையாபுரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக நடித்துவரும் நடிகர்களில் ஒருவர் வையாபுரி. 1995 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லகன்னு என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலாமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் 250 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். ஆனால் காலம் செல்ல செல்ல சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

Vaiyapuri

இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிகர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் வையாபுரி. அதற்காக மிகவும் வித்தியாசமாக, ஸ்டயிலாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.